Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கோவை விமான படைத்தளத்துக்கு சொந்தமான தேஜாஸ் போர் விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது: துபாய் விமான கண்காட்சியில் பெரும் சோகம்

* விமானி பரிதாப பலி, ஏர்ஷோ பாதியில் நிறுத்தம்

துபாய்: துபாய் விமான கண்காட்சியில் தமிழ்நாட்டில் கோவை சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தைச் சேர்ந்த தேஜாஸ் போர் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். துபாயில் உள்ள அல் மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17ஆம் தேதி விமான கண்காட்சி 2025 தொடங்கியது. விமான கண்காட்சியின் கடைசி நாளான நேற்று இந்திய விமானப் படையின் தேஜாஸ் விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியைக் காண ஏராளமானோர் கூடி இருந்தனர். இதில் தமிழ்நாட்டின் கோவை சூலூர் படைப்பிரிவில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இணைந்து செயல்பட்டு வரும் தேஜாஸ் போர் விமானமும் கண்காட்சியில் பங்கேற்றது. தேஜாஸ் போர் விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மைதானத்தில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. துபாய் நேரப்படி பிற்பகல் 2.15 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் விமானி பலியானார்.

இதை தொடர்ந்து விமான கண்காட்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த விபத்தை உறுதிப்படுத்தியுள்ள இந்திய விமானப் படை, துபாய் விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில்,’ துபாய் விமான கண்காட்சியில் வான் கண்காட்சியின் போது இந்திய விமானப்படையின் தேஜாஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். இவர் கோவை சூலூர் விமானப்படை தளத்தை சேர்ந்தவர்.

உயிர் இழப்புக்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருடன் இந்திய விமானப் படை உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேஜாஸ் விமானம் தரையில் கீழே விழுந்து நொறுங்கிய காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் பாா்த்துக்கொண்டு இருக்கும் போதே விமானம் நேரடியாக தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதைப்பார்த்துக்கொண்டு இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர். மேலும் தீயணைப்பு மற்றும் அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைவாக விரைந்து சென்ற காட்சிகள் வைரலாகி வருகிறது. துபாய் விமான கண்காட்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* மேலும் 97 விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் மேலும் 97 தேஜாஸ் போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒன்றிய அரசு கையெழுத்திட்டது. 2027ஆம் ஆண்டு முதல் சப்ளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

* தேஜாஸ் விமானத்தின் 2வது விபத்து

* பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானமான தேஜாஸ், தனது முதல் விமானத்தை கடந்த 2001, ஜனவரி 4ஆம் தேதி இயக்கியது.

* ஒற்றை எஞ்சின் கொண்ட இந்த உள்நாட்டுப் போர் விமானத்துக்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய், தேஜாஸ் என பெரிட்டார்.

* இந்திய விமானப்படையின் தேஜாஸ் இலகு ரக போர் விமானம் முதன்முறையாக கடந்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ஜெய்சல்மாரில் நடைபெற்ற ஒரு பயிற்சிப் பயணத்தின்போது விபத்துக்குள்ளானது.

* தற்போது துபாயில் விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதன் வீடியா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

* எப்படி நடந்தது விபத்து?

எதிர்மறை ஜி-போர்ஸ் திருப்பத்திலிருந்து விமானி மீளத் தவறிவிட்டதால் விபத்து நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்மறை ஜி-போர்ஸ் என்பது ஈர்ப்பு விசைக்கு எதிரான திசையில் செல்லும் சக்தியாகும். தேஜாஸ் எதிர்மறை ஜி போர்ஸ் திறனை மீட்கும் சக்தின் கொண்டது. இது தேஜாஸ் விமானத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஆனால் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* தேஜாஸ் சிறப்பு என்ன?

* தேஜாஸ் போர் விமானம் அதிகபட்சமாக 4,000 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்டது.

* இது ஒற்றை-பைலட், ஒற்றை-இயந்திர விமானம்.

* அதிகபட்சமாக 13,300 கிலோ புறப்படும் எடையுடன் இயங்குகிறது.