சென்னை: அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தொலைக்காட்சி விவாதத்தில் பட்டியலின, பழங்குடியினர் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. காவல் துணை ஆணையர், உதவி ஆணையருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டது. கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அறிக்கையாக நவ. 10க்குள் அளிக்க ஆணையிட்டது.
+
Advertisement
