கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும்: பிரதமரிடம் எடப்பாடி கோரிக்கை மனு
கோவை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார். 'கோவை, மதுரையின் வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் முக்கியமானவை. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததால் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளையும் தொடங்க வேண்டும்.மறு சுழற்சி செய்யப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல் வழியாக கோவை -ராமேஸ்வரம் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்' எனவும் எடப்பாடி கோரிக்கை மனு அளித்தார்.


