கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் தொடங்குவதற்கான அரசின் விரிவான திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது ஒன்றிய அரசு..!!
டெல்லி: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் தொடங்குவதற்கான அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. கோவையில் தற்போதைய மக்கள்தொகை 15.84 லட்சம் மட்டுமே என்பதால் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது. மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு ஒரு நகரின் மக்கள் தொகை குறைந்தது 20 லட்சமாக இருக்க வேண்டும். மதுரையின் மக்கள்தொகையும் 15 லட்சம் மட்டுமே இருப்பதால் மெட்ரோ ரயில் சேவை தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. கோவை, மதுரைக்கு உகந்த பேருந்து போக்குவரத்து திட்டத்தை ஆராயுமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது.


