கோவை: கோவையில் ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார் லாரி மீது மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை, அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை தமிழ்நாட்டின் முதல் நீண்ட மேம்பாலத்தை முதலமைச்சர் கடந்த 9-ந்தேதி திறந்து வைத்தார். இந்த புதிய மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையில், கோல்ட் வின்ஸ் பகுதிக்கு பாலத்தில் இருந்து வேகமாக சென்ற போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கார் லாரிக்கு அடியில் புகுந்து அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் லாரிக்கு அடியில் இருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.