Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே தமிழ்நாடு அரசின் மாபெரும் கனவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை: ரூ.100 கோடி முதலீட்டில் இணை உருவாக்க நிதியம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வளர்ச்சியின் அடையாளமாக தொழில் நிறுவனங்கள் உள்ளன. தொழில் மாநாடுகள் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு மட்டுமின்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சான்றாக உள்ளது. அமைதியான, சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலத்தை தேடித்தான் தொழில் நிறுவனங்கள் வரும். ஆட்சி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. ரூ.100 கோடி முதலீட்டில் இணை உருவாக்க நிதியம் உருவாக்கப்படும் என்று கூறினார்.