Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

62 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 38 நபர்களுக்கும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 18 நபர்களுக்கும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 6 நபர்களுக்கும், என மொத்தம் 62 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 23 மீன்துறை சார் ஆய்வாளர், 12 உதவியாளர் மற்றும் 3 இளநிலை கணக்காளர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தொழிற்நுட்பர் (இயக்குபவர்) பணியிடத்திற்கு 15 நபர்களும், விரிவாக்க அலுவலர் நிலை-1 பணியிடத்திற்கு 3 நபர்களும், என மொத்தம் 18 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நியமனம் செய்யப்பட்ட 18 நபர்கள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரிவர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribe) சிறப்பு நியமனம் அடிப்படையில் 2 உதவிப் பேராசிரியர். 1 பண்ணை மேலாளர் (Farm Manager), 3 குறிப்பான் (Marker), என மொத்தம் 6 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைச் செயலாளர் டாக்டர் ந. சுப்பையன்,இ.ஆ.ப., மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் க.வீ. முரளீதரன், இ.ஆ.ப., பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் / ஆவின் நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை. இ.ஆ.ப., தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் துணை வேந்தர் (பொறுப்பு) முனைவர் இர. நரேந்திரபாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.