Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டி.டி.கே சாலை வீனஸ் காலனியில் மழை நீர் வடிகால்வாய், கழிவுநீர் குழாய்கள் விரிவாக்க பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சென்னை: டி.டி.கே சாலை வீனஸ் காலனியில் மழை நீர் வடிகால்வாய், கழிவுநீர் குழாய்கள் விரிவாக்க பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-118, டி.டி.கே சாலை ஆழ்வார்பேட்டையில் மாநகராட்சி சார்பில், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில், சென்னை குடிநீர் வாரியத்தால் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி, 200 மீட்டர் நீளத்திற்கு, புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள், வீனஸ் காலனி 1வது தெரு, 2வது தெரு, சீமான் சீனிவாசன் தெரு, வரதராஜபுரம் பிரதான சாலை, கஸ்தூரி எஸ்டேட் 1வது தெரு, சேஷாத்திரி தெரு மற்றும் முரேஷ் கேட் சாலை ஆகிய தெருக்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கம் ஏற்படுகிறது.

இந்த தெருக்களில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கா வண்ணம், ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை குறுக்கு தெரு, இளங்கோ சாலை, போயஸ் ரோடு, வெங்கடரத்தினம் சாலை, ராஜகிருஷ்ணா ரோடு, நல்லான் போயஸ் ரோடு, வரதராஜபுரம் பிரதான சாலை, மான் னிவாசன் ரோடு மற்றும் டிடிகே சாலை ஆகிய பத்து தெருக்களில் மழை நீர் வடிகால்கள் சுமார் 2.16 கிமீ நீளத்திற்கு ரூ.8.21 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எதிர்வரும் பருவமழையையொட்டி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பணிகளை மிக விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேற்கண்ட மழை நீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேங்கும் மழை நீரை எல்டாம்ஸ் சாலை, சி.பி. ராமசாமி சாலை, லஸ் சர்ச் சாலை மற்றும் சி.ஐ.டி காலனி ஆகிய நான்கு வழியாக வெளியேற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.