சென்னை: ஏஐசிடிஇயின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு சிமேட் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த அக்டோபரில் வெளியானது.
தொடர்ந்து, இணையதள விண்ணப்பப்பதிவு அக்டோபர் 17 முதல் நவம்பர் 25ம் தேதி வரை நடந்தது. சுமார் 75 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்தனர். இந்நிலையில் தேர்வுக்கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி சிமேட் தேர்வு ஜனவரி 25ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளம் வழியாக பட்டதாரிகள் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.


