சென்னை: ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 17ல் தொடங்கி நவம்பர் 17ம் தேதி முடிந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நவம்பர் 24ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் https://cmat.nta.nic.in/ எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்த நவம்பர் 25ம் தேதி கடைசி. விண்ணப்பங்களில் திருத்தங்கள் இருப்பின் நவம்பர் 26 முதல் 28ம் வரை மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
+
Advertisement


