Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழவேற்காடு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூய்மை பணியாளர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு எடமணி கிராமத்தில் வசிப்பவர் சம்பத்(50) பழவேற்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணி செய்து வருகிறார். வழக்கம்போல் இன்று காலை எடமணி கிராமத்தில் இருந்து பசியாவரம் மேம்பாலம் வழியாக பழவேற்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.

வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சம்பத் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து கிராம மக்கள் அப்பகுதிக்கு வந்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் விரைந்து வந்த திருப்பாலைவனம் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்து சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிசிடிவி கேமரா பதிவை கொண்டு மோதிய வாகனத்தை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னேரி பழவேற்காடு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பசியாவரம்-பழவேற்காடு இடையே மேம்பால பணிகள் முடிவுராத நிலையில் தொடர்ந்து இது போன்று விபத்துக்கள் அப்பகுதியில் நடந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.