சென்னை: தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. மாநகராட்சியுடன் தமிழ்நாடு அரசு கலந்து பேசி தூய்மை பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை தர வேண்டும் என கூறிய நீதிமன்றம், தூய்மைப் பணியை தனியாருக்கு தரும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்தது.
+
Advertisement