Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கிளாட் நுழைவுத்தேர்வு: அக்.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் 2026-27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கிளாட் நுழைவுத் தேர்வுக்கு அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நம்நாட்டில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் 25 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேருவதற்கு கிளாட் (Common Law Admission Test-CLAT) எனும் பொது சட்ட நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இந்நிலையில், 2026-27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கிளாட் நுழைவுத் தேர்வு டிசம்பர் 7ம் தேதி மதியம் 2 முதல் 4 மணி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க அக்டோபர் 31ம் தேதிக்குள் /consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.4000ம், எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.3500ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்பட கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.