சென்னை: பத்தாம் வகுப்பு பிற பாடங்களுக்கான தேர்வுக்கு இடையே 4 முதல் 9 நாட்கள் இடைவெளி விடப்பட்டுள்ளது. ஆனால் அதிக பாடங்கள் கொண்ட சமூக அறிவியல் பாடத்துக்கு மட்டும் 2 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. அந்த நாட்களில் திருப்புதல் செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். சுமார் 27 பாடங்கள் கொண்ட சமூக அறிவியல் பாடங்களை 2 நாள் விடுமுறையில் திருப்புதல் செய்ய முடியாது. அதனால் மாணவர்கள் தேர்ச்சி வீதம் குறையும் அபாயம் உள்ளது என்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அனைத்து மாணவர்களும் சமூக அறிவியல் பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உதவும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணையில் உரிய திருத்தம் செய்து சமூக அறிவியல் பாடத் தேர்வுக்கு முன்னதாக கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
+
Advertisement
