சிட்ரான் நிறுவனம், கார்களின் விலையை ரூ.2.67 லட்சம் வரை குறைத்துள்ளது. இதன்படி, சிட்ரான் சி3 கார் முன்பு ரூ.5.25 லட்சம் முதல் ரூ.10.21 லட்சம் வரை இருந்தது. தற்போது ரூ.4.8 லட்சம் முதல் ரூ.9.40 லட்சம் என குறைந்து விட்டது.
சி3 ஏர்கிராஸ் துவக்க விலை ரூ.8.62 லட்சத்தில் இருந்து ரூ.8.1 லட்சமாகவும், டாப் வேரியண்ட் ரூ.14.27 லட்சத்தில் இருந்து ரூ.13.8 லட்சமாகவும், சி5 ஏர்கிராஸ் ரூ.39.99 லட்சத்தில் இருந்து ரூ.37.32 லட்சமாகவும் குறைந்துள்ளது. பசால்ட் கார் விலை ரூ.1.02 லட்சம் வரை குறைக்கப்பட்டு ரூ.7.95 லட்சம் முதல் ரூ.14.1 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.