சிட்ரான் நிறுவனம், சி3 வரிசையில் புதிய சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மற்றும் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 82 எச்பி பவரை வெளிப்படுத்தும். இதுபோல், 1.2 லிட்டர் பர்போ பெட்ரோல் இன்ஜின் வேரியண்டிலும் கிடைக்கும். இது அதிகபட்சமாக 110 எச்பி பவரை வெளிப்படுத்தும். சி3 எக்ஸ் பேட்ச் இடம் பெற்றுள்ளது.
ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், கீலெஸ் என்ட்ரி, உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சி3 வரிசையில் டாப் வேரியண்டாக இது இருக்கும் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.7.91 லட்சம். எக்ஸ் ஷைனில் டர்போ மேனுவல் டிரான்ஸ்மிஷன் சுமார் ரூ.9.11 லட்சம் எனவும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் சுமார் ரூ.9.9 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிஎன்ஜி கிட்டுக்கு சுமார் ரூ.93,000, 360 கேமரா பொருத்த சுமார் ரூ.25,000 , டூயல் டோன் வண்ணத்துக்கு ரூ.15,000 கூடுதலாக செலுத்த வேண்டி வரும்.