சிட்ரான் இந்தியா நிறுவனம் ஏர்கிராஸ் எக்ஸ் என்ற காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சி3எக்ஸ் மற்றும் பசால்ட் எக்ஸ் ஆகியவற்றுக்கு அடுத்ததாக, சிட்ரான் 2.0 வரிசையில் 3வதாக அறிமுகம் செய்யப்படும் கார் இது.
இந்தக் காரில் 3 இன்ஜின் வேரியண்ட்கள் உள்ளன. 1.2 லிட்டர் 3 சிலிண்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் 82 எச்பி பவரை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 110 எச்பி பவரை வெளிப்படுத்தும். இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க்யூ கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. இதுதவிர, சிஎன்ஜி வேரியண்டும் உண்டு.
குரூஸ் கண்ட்ரோல், ஸ்பீடு லிமிட்டர், ஆட்டோ ஐஆர்விஎம், எல்இடி புரொஜெக்டர் ஃபாக் லேம்ப், 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் மற்றும் 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், 10.25 அங்குல இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே மற்ம் 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம் பெற்றுள்ளன.
யு, பிளஸ் மற்றும் மேக்ஸ் என 3 வேரியண்ட்கள் உள்ளன. யு வேரியண்ட் 5 சீட்கள் கொண்டது. ஷோரூம் விலை சுமார் ரூ.8,29,000. பிளஸ் வேரியண்டில் 5 சீட்டர் ரூ.9,77,000, 7 சீட்டர் ரூ.11,37,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேக்ஸ் வேரியண்ட்டில் 7 சீட்டர் 1.2 லிட்டர் டர்போ இன்ஜின் மேனுவல் வேரியண்ட் சுமார் ரூ.12,34,500 எனவும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் சுமார் ரூ.13,49,100 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
