I தொழில்நுட்பம் எதையும் சாத்தியப்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக இருப்பது போன்ற படங்கள் வைரலாகி வருகின்றன. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஒன்றாக இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.நடிகர்கள் அனைவரும் சாதாரணமாக ஒரு தெருவில் வேட்டி கட்டி எளிமையாக நடந்து வருவது போலவும், ஓட்டலில் சேர்ந்து சிரித்துப் பேசிச் சாப்பிடுவது போலவும், டான்ஸ் ஆடுவது போலவும் இந்த ஏஐ புகைப்படங்கள் ரசிகர்களால் உருவாக்கப்பட்டுப் பகிரப்படுகின்றன. நடிகர்களைப் பொதுவாகத் திரையில் மட்டுமே காண்கிறோம். இந்த ட்ரெண்ட் இங்கே மட்டுமல்ல இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழிவாரியான நடிகர்கள் அவரவர் ஊரில் சாதாரணமாக சுற்றித்திரிந்தால் எப்படி இருக்குமோ அப்படி உருவாக்கி இந்திய டிரண்டாக்கி இருக்கிறார்கள். தற்போது நடிகர்கள் மட்டும்தானா என்கிற கேள்வியுடன் தற்போது இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் மேலும் இந்தப் படம் வருமா என எதிர்பார்த்த படக்குழுக்கள் உதாரணத்திற்கு முதல்வன் 2 , LCU கிளைமாக்ஸ், மர்மயோகி, உள்ளிட்ட படங்கள் படப்பிடிப்பு தளங்கள் என அனைத்தும் தற்போது இந்த AI டிரெண்டில் சுற்றி வருகின்றன. பலரும் இதை பகிர்ந்து இப்படி உண்மையில் நடந்தால் அருமையாக இருக்கும் எனவும் தங்களது விருப்பத்தையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது அடுத்த கட்ட லெவலுக்கு நகர்ந்து வீடியோவாகவும் அத்தனை நடிகர்களும் பிரபலங்களும் தங்களுக்குள் சிரித்து பேசி டீக்கடையில் அமர்ந்து டீ குடிப்பது, சேர்ந்து விளையாடுவது, தெருவில் நடந்து செல்வது என அனைத்தும் இப்போது ட்ரெண்டிங்கில் உலா வருகிறது.
+
Advertisement

