சின்சினாட்டி: அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, 6-4, 6-3 என ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெலை வீழ்த்தினார். செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 2-6, 6-4, 6-3 என உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவையும், அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லர், 6-4,6-3 என சகநாட்டைச் சேர்ந்த கேட்டி மெக்னலியையும் வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி 7-6, 7-6, என கிரிஸ் நாட்டின் மரியா சக்கரியை சாய்த்தார். ரஷ்யாவின் டாரியா கசட்கினா, 3-6,6-1,4-6, என இத்தாலியின் லூசியா ப்ரோனெட்டியிடம் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் சோபியா கெனின் 7-6, 3-6, 3-6 என பிரான்சின் வர்வரா கிராச்சேவாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். ஆடவர் ஒற்றையர் 2வதுசுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் 2வது சுற்றில் வெற்றிபெற்றது. ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ், ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.