மத நல்லிணத்துக்கு எடுத்துகாட்டாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இல்லாத ஊரில் தேவாலயத் திருவிழாவை முன்னின்று நடத்திய இந்துக்கள்
நெல்லை: வள்ளியூர் அருகே மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இல்லாத ஊரில் 103 ஆண்டுகள் பழமையான தேவாலயத் திருவிழாவை முன்னின்று 10 நாட்கள் பொதுமக்கள் நடத்தினர். புனித சவேரியார் சப்பரபவனியில் உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி இந்துக்கள் வழிபாடு செய்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை ஊரில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களே வசிக்காத கிராமத்தில் பழமையான தேவாலயத் திருவிழாவை இந்து மக்களே முன்னின்று மதங்களைக் கடந்து கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த வடலிவிளை கிராமத்தில், 103 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் ஒரு காலத்தில் மக்களே நடத்தி வருகின்றனர். அதன்படி, கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த ஆண்டுத் திருவிழாவில், தினமும் ஜெபமாலை மற்றும் திருப்பலி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் நாள் திருவிழா மதியம் நடைபெற்ற சவேரியார் சப்பரபவனியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்களும், ஊர் மக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
குறிப்பாக, அந்த ஊரில் வசிக்கும் இந்து மக்கள், தங்கள் வேண்டுதல்களுக்காக உப்பு, மிளகு மற்றும் ரோஜா மலர் மாலைகளைத் தட்டில் வைத்துப் புனித சவேரியாரை பக்தியுடன் வழிபட்டனர். குறிப்பாக அங்குள்ள அம்மன் கோயில் அய்யாவழி கோயில் உள்ளிட்ட இந்து கோயில்களில் முன்பு புனித சவேரியாரின் சப்படங்கள் நிறுத்தப்பட்டு இந்து மக்கள் மாலை அணிவித்து வழிபட்டனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருமே இல்லாத நிலையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அந்த கிராம இந்துக்கள் முன்னின்று நடத்திய இந்த விழா சமூக நல்லிணக்கத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சமய நல்லிணக்கமாக அமைந்துள்ளது.

