ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் கட்சி சார்பில் போட்டியிட்ட 19 பேர் பீகார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். நேற்று அவர்கள் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை சந்தித்து ஆளும்தேசிய ஜனநாயக கூட்டணியின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பீகாரில் அடுத்த அரசு அமைப்பது குறித்து விவாதித்தனர்.
இதுகுறித்து சிராக் பாஸ்வான் கூறுகையில்,’ நிதிஷ்குமாருக்கும், எனக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாக தவறான கதையை உருவாக்கிய ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் தேர்தலில் படுதோல்வியை அடைந்துள்ளன. இந்த சூழலில் எங்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து புதிய அரசு அமைப்பது குறித்து விவாதித்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் மத்திய தலைமைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பீகார் சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத எங்கள் கட்சியின் மீது தேசியஜனநாயக கூட்டணி நம்பிக்கை வைத்தது. 2020 ஆம் ஆண்டில், எல்ஜேபி(ஆர்வி)யின் தேர்தல் தோல்விக்கு பலர் காரணம். கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க நான் போராடினேன்’ என்றார்.


