லடாக்: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை தற்போது பேச்சுவார்த்தை மூலம் குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 23 கிமீ தூரத்தில் உள்ள லடாக்கில் இந்தியா ஒரு புதிய உயரமான விமானப்படை தளத்தை அமைத்துள்ளது.
சுமார் 13,700 அடி உயரத்தில் கட்டப்பட்ட முத்-நியோமா விமானப்படை நிலையத்தில் 2.73 கிமீ ஓடுபாதை, புதிய ஹேங்கர்கள், ஒரு ஏடிசி கோபுரம், பணியாளர்களுக்கான மேம்படுத்தப்பட்ட தங்குமிடம் ஆகியவை உள்ளன. இதன் மூலம் இங்கு பெரிய ராணுவ விமானங்களை தரையிறக்க முடியும். ரூ.230 கோடி மதிப்பில் இந்த விமானப்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது.


