சீன விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: சீன விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.