புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம் கலந்து கொண்டார். அப்போது பேசிய பி.வி.ஆர்.சுப்பிரமணியம், “ஜி.எஸ்.டி. 2.0க்கு பிறகு, தீபாவளிக்கு முன்பாக மற்றொரு சீர்திருத்தம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆயோக் உறுப்பினர் ராஜீவ் கவுபா தலைமையிலான குழு இந்த சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் நாடுகள் அனைத்தும் தங்களுக்குள்ளேயே 50 சதவீதம் வர்த்தகம் செய்யும் அேதசமயம், வங்கதேசம் இந்தியாவின் 6வது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், நேபாளம் முதல் 10 இடங்களிலும் உள்ளன. அண்டை நாடுகளுடனான வர்த்தக உறவை அதிகரிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, 18 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட சீனாவுடன் இந்தியா வலுவான வர்த்தக உறவை பெற்றிருக்க வேண்டும்” என்றார்.