* இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ‘பிராங்கோ டெஸ்ட்’ என்கிற ரக்பி விளையாட்டில் உள்ள ஓட்ட சோதனையை நடத்த பயிற்சிக்குழு திட்டமிட்டுள்ளது.
* பொதுவான நாடுகளில் கூட இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு விளையாட்டுத் தொடர்கள் நடைபெற வாய்ப்பில்லை என்று ஒன்றிய விளையாட்டு அமைச்சம் நேற்று தெரிவித்துள்ளது.
* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக உள்ள அஜித் அகர்கரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட உள்ளது.
* ஆஸ்திரேலியா ஏ-இந்திய ஏ பெண்கள் அணிகளுக்கு இடையிலான பிரிஸ்பேன் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
* ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக புஜாராவும், மும்பை அணிக்கு கேப்டனாக இல்லாமல் வீரராகவும் ரகானே களம் இறங்குவது நேற்று உறுதியாகி உள்ளது.