* பிடிப்பதால் ஆடுகிறேன் ஜோகோவிச் நச் பதில்
லண்டன்: செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (38). இவர், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 24 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்தாண்டில் மட்டும் 4 முறை அரை இறுதி வரை முன்னேறி கோப்பையை தவற விட்டுள்ளார். அதனால், ஜோகோவிச் விரைவில் ஓய்வு பெறுவார் என டென்னிஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மாறாக, தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர் ஆடி வருகிறார். இந்நிலையில், நிருபருக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பின் நான் ஓய்வு பெறுவேன் என சிலர் கூறிவருகின்றனர். மாறாக, சாதனைக்காக மட்டும் நான் டென்னிஸ் ஆடவில்லை. சாதனைகள் எனக்கு பெரிய ஊக்க ஆற்றலாக திகழ்பவை. இருப்பினும், டென்னிஸ் ஆடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தொடர்ந்து ஆடுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
* பாக். மகளிர் அணி ஹெட் கோச் நீக்கம்
கராச்சி: சமீபத்தில் முடிந்த மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் மகளிர் அணி சொதப்பலாக ஆடி அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. அதனால் பாக். கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் முகம்மது வாசிமை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கி உள்ளது. மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டிகளில் பாகிஸ்தான் மகளிர் அணி கடைசி இடத்தை பிடித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
* ஒன்டே சேலஞ்சர் கோப்பை டிராவிட் மகனுக்கு வாய்ப்பு
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான்களில் ஒருவரான ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வய் (16). இவர், ஐதராபாத்தில் இன்று துவங்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒன் டே சேலஞ்சர் கோப்பைக்கான ஆடவர் சி- பிரிவு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அன்வய், சிறந்த பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் திகழ்கிறார். ராகுல் டிராவிட்டின் மூத்த மகன் சமித், மஹாராஜா டி20 கே.எஸ்சிஏ கோப்பைக்கான போட்டிகளில் ஏற்கனவே ஆடியுள்ளார். யு19 ஒன் டே சேலஞ்சர் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டறிவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
