* ஆஸி. அபார வெற்றி
இந்தூர்: மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 326 ரன்களை குவிந்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆஷ்லீ கார்ட்னர் 115 ரன் (83 பந்து, ஒரு சிக்சர், 13 பவுண்டரி) விளாசினார். 327 ரன் எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 43.2 ஓவரில் 237 ரன்னில் ஆட்டமிழந்தது. இதனால் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணிகள் கேப்டன் சோபி டிவைன் 112 ரன் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
* ஏலம் போகாத அஸ்வின்
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் அஸ்வின் தனது பெயரை பதிவு செய்தார். அஸ்வின் தனது அடிப்படை விலையாக ரூ.1.06 கோடி என நிர்ணயித்திருந்தார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.இந்நிலையில், ஏலத்தில் அஷ்வினை எந்த அணியும் எடுக்கவில்லை. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் அஸ்வின் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.