Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புலியாய் பாய்ந்த சிலி வீராங்கனைகள்: கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து, ஈகுவடாரை வீழ்த்தி அபாரம்

குய்டோ: ஈகுவடாரில் நடந்து வரும் கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து போட்டியில் நேற்று, ஈகுவடார் அணியை, சிலி அணி, 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில் சிலி - ஈகுவடார் அணிகள் மோதின. போட்டி துவங்கி, 24வது நிமிடத்தில் ஈகுவடார் அணி வீராங்கனை நயெலி பொலனோஸ் முதல் கோல் அடித்து அசத்தினார்.

இருப்பினும், சிலி அணியின் சோன்யா கீபெ, 25வது நிமிடத்திலும், நயாடெட் லோபேஸ் 45+5வது நிமிடத்திலும் இரு கோல்கள் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தனர். அதன் பின் ஆட்ட நேரம் முடியும் வரை யாரும் கோல் போடாததால், 2-1 என்ற கோல் கணக்கில் சிலி அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பெரு மகளிர் அணியை, அர்ஜென்டினா அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது.