குழந்தைகள் தின கொண்டாட்டம் சூரியன் எப்.எம் சார்பில் வர்ணஜாலம் ஓவியப்போட்டி: வரும் 23ம் தேதி நடக்கிறது
சென்னை: குழந்தைகள் தின கொண்டாட்டமாக சூரியன் எப்.எம் சார்பில் வர்ணஜாலம் ஓவியப்போட்டி வரும் 23ம் தேதி பிரமாண்டமாக நடக்கிறது. அனுமதி இலவசம் என்பதால் முன்பதிவு இல்லாமல் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். ஆண்டுதோறும் சூரியன் எப்.எம் சார்பில் வர்ணஜாலம் என்ற பிரமாண்ட ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சூரியன் எப்.எம்-ன் வர்ணஜாலம் ஓவியப்போட்டி வரும் 23ம் தேதியன்று பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், பங்கேற்பவர்களுக்கு சான்றிதழும், வெற்றிபெறும் திறமைசாலிகளுக்கு சைக்கிள், டிவி, ஸ்மார்ட் வாட்ச் போன்ற ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
ஓவியப்போட்டியானது வானவில், இசைக்கருவிகள், 2030ல் செயற்கை நுண்ணறிவு, நிழலோவியம் என்ற தலைப்புகளில் நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க அனுமதி இலவசம் என்பதால், மாணவர்கள் தங்களது பள்ளி அடையாள அட்டையுடன் வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் போட்டியாளர்கள், பெற்றோர்கள் அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவர். ஓவியப்போட்டி காலை 10 முதல் 11.30 வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 86789 35935 என்ற சூரியன் எப்.எம்-ன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


