சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே மேட்டு குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சரவணன். இவரது மகன் புவனேஷ் (9), கோபி என்பவரின் மகன்கள் மோனி பிரசாத்(10), சுஜன்(8). இவர்கள் மூவரும் அரசு பள்ளியில் முறையே 3, 5, 3ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான 3 பேரும் நேற்று அருகிலுள்ள குட்டையில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.
திடீரென 3 பேரும் நீரில் மூழ்க தொடங்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு சோளிங்கர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் 3 சிறுவர்களும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.