குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா தாக்குதலை 45 சதவீதம் வரை குறைக்கும் புதிய மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளில் ஆஸ்துமா தாக்குதல்கள் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். அவற்றின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை குறைப்பது பொது சுகாதார முன்னுரிமையாகும்.பெரியவர்களுக்கு விருப்பமான நிவாரணி சிகிச்சையாக 2-இன்-1 பியூடசோனைடு-ஃபார்மோடெரால் இன்ஹேலர் பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் குழந்தைகளுக்கு இன்னும் பொதுவாக சல்பூட்டமால் பரிந்துரைக்கப் படுகிறது.தி லான்செட்டில் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு சர்வதேச ஆய்வு புடசோனைடு-ஃபார்மோடெரால் என்ற கூட்டு இன்கேலரை பரிந்துரை செய்துள்ளது.
இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான லேசான முதல் மிதமான ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு பயனளிக்கும். CARE ஆய்வு (குழந்தைகள் அழற்சி எதிர்ப்பு ரிலீவர்) நியூசிலாந்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRINZ), லண்டன் இம்பீரியல் கல்லூரி, ஒடாகோ வெலிங்டன் பல்கலைக்கழகம், ஸ்டார்ஷிப் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஆக்லாந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு இந்த சோதனை ஒரு வருடம் நீடித்தது. மேலும் புடசோனைடு-ஃபார்மோடெரால் நிவாரணி சல்பூட்டமால் நிவாரணியை விட ஆஸ்துமா தாக்குதல்களின் விகிதத்தைக் குறைத்தது.பொதுவாக பயன்படுத்தப்படும் இன்கேலரை விட இது மிகவும் பயனளிக்க கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 முதல் 15 வரையிலான குழந்தைகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.