Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தை கடத்தல் வழக்கு: தம்பதியை சிறையில் அடைக்க ஈரோடு மகளிர் நீதிமன்றம் ஆணை

ஈரோடு: பவானி அருகே குழந்தையை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதியை சிறையில் அடைக்க ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேசன்-கீர்த்தனா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை அக்.16ல் கடத்தப்பட்டது. 25 நாள்களுக்குப் பின் நாமக்கல் அருகே குழந்தை மீட்கப்பட்ட நிலையில் ரமேஷ்-நித்யா கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தம்பதியை நவ.26ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.