Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதலமைச்சர் கோப்பை கல்லூரி மாணவர்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (11.10.2025) சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற 2025 முதலமைச்சர் கோப்பை கல்லூரி மாணவர்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 88 கிலோ உடல் எடை பிரிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து, பரிசுத் தொகை காசோலை, சான்றிதழ் மற்றும் வீரன் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற 2025 முதலமைச்சர் கோப்பை கல்லூரி மாணவர்களுக்கான பளுதூக்குதல் விளையாட்டுப் போட்டியில் 98 கிலோ உடல் எடை பிரிவில் வீரர்கள் பளுதூக்குவதை பார்வையிட்டு, கைத்தட்டி உற்சாகப் படுத்தினார்.

மேலும், இன்று நடைபெற்ற 2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் உணவு அருந்தினார். 2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனைகளிடம் விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாடுகள், பங்கேற்பு குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் கலந்துரையாடினார். இந்நிகழ்வில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனைகள், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் தன்புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்பட அரசு அலுவலர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்