முதல்வர்கள், நூலகர்களுக்கு பணி நீட்டிப்பு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
சென்னை: அரசு, அரசு உதவி கல்லூரி முதல்வர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதி நாளான மே 31ம் தேதி வரை பணி நீடிப்பு செய்து ஆணை வழங்கிய முதல்வர், துணை முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கோரிக்கையை ஏற்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பணி நீடிப்பு ஆணை ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டு வந்ததை, மே மாதம் வரை நீடித்து தமிழக அரசு கடந்த 2024 நவம்பர் 12ம் தேதி அரசாணை வெளியிட்டிருந்தது. அரசு, அரசு உதவி கல்லூரி முதல்வர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோருக்கு கல்வி ஆண்டின் இறுதி வரை பணி நீட்டிப்பு வழங்காமல் ஓய்வு பெறும் மாதத்திலேயே பணியிலிருந்து விலக வேண்டும் என்ற நிலை இருந்தது.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கோரிக்கையயை ஏற்று தற்போது கல்லூரி முதல்வர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்களின் பொறுப்பு மற்றும் கடமைகளை கருத்தில் கொண்டு கல்வி ஆண்டின் இறுதி நாளான மே மாதம் 31ம் தேதி வரை அவர்களுக்கு பணி நீடிப்ப ஆணை வழங்கியுள்ள முதல்வர், துணை முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.