Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்; விண்ணப்பங்கள் வரவேற்பு: சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை: முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வு தொகை கிடைக்காத தகுதி வாய்ந்தவரகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இன்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வு தொகை கிடைக்காத தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க வைப்புநிதி பத்திரம், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம், பயனாளியின் வண்ணப் புகைப்படம் ஆகிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்டுள்ள ஆவணங்களோடு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், சிங்காரவேலனார் மாளிகை, 8வது தளம், இராஜாஜி சாலை, சென்னை-1 அலுவலகத்திலுள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் நகர் நல அலுவலர்களிடம் முதிர்வுத் தொகைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.