சென்னை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பாஜ, அதிமுக, பாமகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று, தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பாஜவைச் சேர்ந்த மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவரும், ஒன்றிய முன்னாள் தலைவருமான பேரம்பாக்கம் எஸ்.பகதூர்சேட் தலைமையில் காஞ்சிபுரம் மாநகராட்சி, 16வது வார்டு கவுன்சிலர் சாந்தி துரைராஜ், 27வது வார்டு கவுன்சிலர் ஷாலினி- அதிமுகவின் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வழக்கறிஞர் இ.ராஜன்காந்தி-பா.ம.க.வைச் சேர்ந்த வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.குமரன், ஒன்றிய முன்னாள் செயலாளர் பெரியாநத்தம் பெருமாள் (எ) ரமேஷ், இந்திய குடியரசு கட்சியின் மண்டல பொறுப்பாளர் சம்பத் உள்ளிட்ட அதிமுக-பாஜ-பாமக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய மற்றும் அணி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செயலாளர் க.செல்வம் எம்.பி., காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் சிகேவி.தமிழ்செல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய செயலாளர்கள் கெ.ஞானசேகரன், டி.குமார், வி.ஏழுமலை, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ப.அப்துல்மாலிக், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சி.ராதாகிருஷ்ணன், ஆகியோர் உடனிருந்தனர்.
திமுகவில் இணைந்த வர்களில் பா.ஜ.வைச் சேர்ந்த சித்தாமூர் ஒன்றியம், ஒன்றிய சிறுபான்மை அணி தலைவர் பி.அமீர்பாஷா, ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் எஸ்.பாஸ்கர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சித்தாமூர் ஒன்றியம், முன்னாள் கிளைச் செயலாளர் எம்.அன்பழகன், பாமகவைச் சேர்ந்த சாலவாக்கம் ஒன்றியச் செயலாளர் ஏ.நரேஷ், சித்தாமூர் ஒன்றிய துணைச் செயலாளர் வி.நாராயணன், ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் ஜி.முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜி.தாமோதரன், வன்னியர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆரியபெரும்பாக்கம் பாலு உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கது.