மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவன தலைவர் ராமதாசை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உடனிருந்தனர். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவன தலைவர் ராமதாசை சந்தித்து உடல்நலம் விசாரித்தது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பெருமதிப்பிற்குரிய மருத்துவர் ராமதாஸ் அய்யாவை சந்தித்து, அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளை தொடர்ந்திட விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.