சென்னை: முடிந்தால் என்னை கைது செய்து பாருங்க.. என தமிழக முதல்வரை மிரட்டிய தவெக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்பேடு ரோகினி திரையரங்கத்தில், நடிகர் தனுஷ் நடித்த இட்லி கடை படம் நேற்று முன்தினம் வெளியானது. அப்போது, படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவர்களிடம், படம் எப்படி உள்ளது என யூடியூப் சேனல் நிருபர்கள் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், ‘நான் மதுரவாயல் 140வது வட்ட தொகுதி தவெக நிர்வாகி. மாவட்ட செயலாளர் பாலமுருகனுடன் உள்ளேன்,’ என்று கூறிய அவர், கரூர் சம்பவம் தொடர்பாக பேசி முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததுடன், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என சவால்விட்டு ஆவேசமாக, பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவியது. தகவலறிந்த கோயம்பேடு போலீசார் அங்கு விரைந்து வந்தபோது, அங்கிருந்து அவர் தப்பினார். அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
+
Advertisement