சென்னை: சென்னை, தியாகராய நகரில் நடந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: பல்வேறு அரசுத் துறை சார்ந்த கோரிக்கைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காண முடிவதாக, தியாகராய நகர் முகாமில் மக்கள் வெளிப்படுத்திய மனநிறைவே சொல்கிறது முகாம்களின் வெற்றியை. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தத்தமது பகுதிகளில் நடைபெறும் முகாம்களை ஆய்வுசெய்து, மக்களின் தேவைகளைத் தீர்த்து வைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இவ்வாறு எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.
+
Advertisement