சென்னை: விழிப்புணர்வோடு ஒருங்கிணைந்து செயல்படுவோம்; பருவமழை காலத்தை பாதிப்புகளின்றி கடப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கி, தமிழ்நாடெங்கும் பரவலாக மழை பெய்து வருவதால், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஆய்வு
செய்தேன்.
பாதுகாப்பாகத் தங்குவதற்கு முகாம்கள், குடிநீர், உணவு, மருந்து ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருப்பதோடு, திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தியுள்ளேன். விழிப்புணர்வோடு ஒருங்கிணைந்து செயல்படுவோம்; பருவமழைக் காலத்தைப் பாதிப்புகளின்றிக் கடப்போம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.