Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் பொருளாதார வளர்ச்சியில் மீண்டும் தமிழகம் முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு’’ தீர்மான ஏற்பு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது; பல்வேறு வழக்குகளால் கடந்த 2 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த நிலையில் செவிலியர் பணியிடங்களுக்காக 1231 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் நிர்வாக கட்டமைப்பு பொறுப்பாளர் வல்லுர் ரமேஷ்ராஜால் பலப்படுத்தப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம் என்று முழங்கி வருகிறோம்.

இதனை அதீத நம்பிக்கை என்று விமர்சிக்கின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 221 தொகுதிகளில் திமுக கூட்டணி கூடுதல் வாக்குகளை பெற்றது. இதன்மூலம் 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறுவதில் என்ன தவறு உள்ளது. தற்போது வீரவசனம் பேசிவரும் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கும் அதிமுக கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டுமே கூடுதல் வாக்குகளை பெற்றது.

தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் எஞ்சிய 5 தொகுதிகளில் திமுகவை விட கூடுதல் வாக்குகளை பெற்றது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் பெற்று வருகின்றனர். விடுபட்ட அனைவருக்கும் விரைவில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். விடியல் பயண திட்டத்தின் மூலம் தினந்தோறும் 65 லட்சம் பயணங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் மகளிர் மாதந்தோறும் 888 ரூபாய் சேமிக்கின்றனர். கலைஞர் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 13.12% எட்டியது. இதன்பின்னர் அதிமுக ஆட்சி காலத்தில் சரிந்து 6%, 7% மட்டுமே இருந்தது. சுமார் 10 ஆண்டுகள் அதலபாதாளத்தில் இருந்த நிலையில் தற்போது 11.19% என பொருளாதார வளர்ச்சியை மீண்டும் முன்னோக்கி முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதன்பிறகு, ‘’ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 1 கோடி குடும்பங்கள் திமுகவில் இணைந்துள்ளனர். வாக்காளர் பட்டியல் குளறுபடி, தொகுதி சீரமைப்பில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க அனுமதிக்க மாட்டோம்’ என்று உட்பட 5 உறுதிமொழிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டிஜெ.கோவிந்தராஜன், அவைத் தலைவர் பகலவன், முன்னாள் தலைமைக்கழக பேச்சாளர்கள் சைதை சாதிக், எழும்பூர் கோபி, டி.ஜே.மூர்த்தி, நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, கதிரவன், எம்எல்.ரவி, எஸ்.ஆர்.ரமேஷ், கே.எஸ்.மணி, சி.எச் சேகர், பாஸ்கர் சுந்தரம், அன்புவாணன், ஸ்டாலின், ஏ.கே.சுரேஷ், ராபர்ட் ராஜா, டாக்டர் பரிமளம், விஜே வெங்கடாசலபதி, பாசே குணசேகரன், ஏ.வி.ராமமூர்த்தி,

கி.வே.ஆனந்தகுமார், டி.கே.சந்திரசேகர், செல்வசேகரன், முரளிதரன், ராஜா, ஆனந்தகுமார், உதயசூரியன், ரவிக்குமார், மணிபாலன், சக்திவேல், ஜான் பொன்னுசாமி, ஜெகதீசன், அபிராமி குமரவேல், ஆரணி முத்து, தமிழ் உதயன், மோகன்ராஜ், மீவி கோதண்டம், நரசிங்கமூர்த்தி, நிலவழகன், வல்லூர் பாலு, தமிழரசன்,

அத்திப்பட்டு கதிர்வேல், மணிமாறன், லோகேஷ், கிருஷ்ணமூர்த்தி, முகமது அலவி, சம்பத், ஆசான பூதூர் சம்பத், ஜி.பி.வெங்கடேசன், ரோஸ் பொன்னையா, ரவிக்குமார், தனசேகர், ஆறுமுகம், தேசராணி, பாஸ்கரன், சுமன்,கோபி, ரமேஷ், ஜெயலலிதா, ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், கார்த்திக் கலந்துகொண்டனர். மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் நன்றி கூறினார்.