சென்னை: தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற 11 தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றவர் ! தேர்தல்களில் எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளித்தவர் ! முத்தான மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மனதில் அகில உலக அளவிலும் நீங்கா இடம் பிடித்தவர் !
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் கழகத் தலைமைப் பொறுப்பை ஏற்று இன்று 8-ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. மக்களிடையே ஆழ்ந்த பாசமும், தொண்டர்களிடையே உறுதியான ஒற்றுமையும் ஏற்படுத்திய இவரது தலைமையின் பயணம், கழக வளர்ச்சியின் பொற்காலமாக அமைந்துள்ளது.
* அரசியல் பயணப் பொறுப்புகள்
· 1966 - கோபாலபுரம் இளைஞர் திமுக அமைப்பாளர்
· 1967 - பகுதிப் பிரதிநிதி
· 1969 - மாவட்ட பிரதிநிதி
· 1982 - இளைஞரணி செயலாளர்
· 1989 - சட்டமன்ற உறுப்பினர் (ஆயிரம் விளக்கு தொகுதி)
· 1996 - சென்னை மாநகர மேயர்
· 2003 - துணைப் பொதுச் செயலாளர், திமுக
· 2006 - தமிழ்நாடு அரசு, உள்ளாட்சித் துறை அமைச்சர்
· 2008 - கழகப் பொருளாளர்
· 2009 - தமிழ்நாடு துணை முதலமைச்சர்
· 2016 - எதிர்க்கட்சித் தலைவர்
· 2017 - திமுக செயல் தலைவர்
· 2018 - திமுக தலைவர்
· 2021 - தமிழகத்தின் முதலமைச்சர் தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பின்னர் 11 தேர்தல்களில் வெற்றி பெற்று, எதிரிகளுக்கு தோல்விகளை பரிசாக தந்த மாபெரும் தலைவர்
தளபதி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தபின் - தாமே சிந்தித்து தாமே முடிவுகளை மேற்கொண்டு சந்தித்த முதல் தேர்தல் - 2019இல் நாடாளுமன்றத் தேர்தல். அதில் தமிழகத்தின் 39 தொகுதிகளில், 38 தொகுதிகளை வென்றுமகத்தான வெற்றிச் சரித்திரத்தைத் தொடங்கினார்.
இரண்டாவதாக 2021 சட்டமன்ற தேர்தல் - பத்தாண்டு காலப் பாதக ஆட்சியை விரட்டி - ஆறாம் முறையாக கழக ஆட்சியை நிறுவி - முதலமைச்சரானார். மூன்றாவதாக 2021 அக்டோபரில் நடைபெற்ற 9 மாவட்டங்களின் ஊராட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றிகண்டார்.
நான்காவதாக 2022 பிப்ரவரியில் தமிழகம் முழுதும் நடைபெற்ற நகராட்சித் தேர்தல்களில் அதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் பெறாத மாபெரும் வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தேடித்தந்தார்.
ஐந்தாவதாக தற்போது (2023 மார்ச்) நடைபெற்ற ஈரோடு இடைத் தேர்தலிலும் மகத்தான வெற்றிகண்டு, ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.
2024-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளையும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றி ஒரு புதிய வரலாற்றுச் சாதனை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சாதனையில் பல முக்கிய அம்சங்கள் அடங்கியிருக்கின்றன. பி.ஜே.பி. கட்சி போட்டியிட்ட 23 இடங்களில் ஒன்றில்கூட வெற்றி பெற முடியவில்லை. அத்துடன் 11 தொகுதிகளில் டெபாசிட்களையும் இழந்துள்ளது.
அ.தி.மு.க. கட்சியும் அதன்கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்ட 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அத்துடன் 5 முறை தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்த அ.தி.மு.க. கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் டெபாசிட்களை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகத் தலைவராக பொறுப்பேற்ற பின் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற்ற மாவீரர் ! எதிரிகளுக்கு தோல்விகளை மட்டுமே பரிசாகத் தந்து அதிரவைத்தவர்.
2018 ஆம் ஆண்டு கழகத் தலைவராகப் பொறுப்பேற்ற நாள் முதல் தி.மு.க. தொண்டர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி, கழக வளர்ச்சியை உறுதி செய்துள்ளார். தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி, பல்வேறு நவீன திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார். சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை என்ற தத்துவங்களை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளார்.
முதலமைச்சராக பொறப்பேற்ற நான்காண்டுகளில் மக்களின் நலனுக்காக பல்வேறு முத்திரைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டை சமூகநீதியும் வளர்ச்சியும் இணைந்து விளங்கும் மாநிலமாக மாற்றி வருகிறார். மகளிர்க்கான விடியல் பேருந்து பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம், நான் முதல்வன் திட்டம், “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” பணிபுரியும் மகளிருக்கு “தோழி விடுதிகள்” மாணவர்கள் நலனுக்காக தமிழ்ப் புதல்வன், உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின், தாயுமானவர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஐ.நா. அவையும், இந்திய ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்புகளும், சான்றோர்களும் மிகச்சிறந்த முதலமைச்சர், மிகச்சிறந்த நிர்வாகத் திறன் படைத்தவர். ஏழை எளியோரால் எங்கள் நலன் காக்கும் திராவிட நாயகர் ! என போற்றப்படுகிறார் !
மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், மகளிர்க்கான விடியல் பயணத் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களும், வெளிநாடுகளும் பின்பற்றும் வகையில் நடைமுறைப்படுத்தியுள்ளார் நமது தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அவர்கள் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தொடங்கிவைத்து மக்கள் போற்றும் உன்னதத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அவருடைய திட்டங்கள் அனைத்து மாநிலங்களும் பின்பற்றக்கூடிய வகையாக உள்ளன என மனதாரப் பாராட்டினார்.
அதே போன்று, 27.8.2025 அன்று பீகாரில் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திட்டத்தை கண்டிக்கும் வகையில் நடைபெற்ற பேரணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, பீகார் ராஷ்ட்ரியா ஜனதா கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி மற்றும் இந்திய கூட்டணி தலைவர் ஆகியோருடன் பங்கேற்று இந்தியாவின் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தன்னுடைய ஆழமான கருத்தினை பதிவு செய்து மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தமிழக அரசின் நவீன வளர்ச்சிக்கும், திராவிடஇயக்கத்தின் தொடர்ச்சிக்கும், மு.க. ஸ்டாலின் அவர்களின் 8 ஆண்டுகால தலைமை சிறப்பாக விளங்குகிறது. மக்கள் நம்பிக்கையோடும், தொண்டர்கள் உறுதியோடும், தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார்.