விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உழவர் சந்தை பகுதியை சேர்ந்த கிரிராஜ், ராயனூர் முகாமை சேர்ந்த கார்த்திக் (எ)சுஜித், காளியப்பனூரை சேர்ந்த சரவணா, தாந்தோணிமலையை சேர்ந்த ஷாருக்கான், அம்மன்நகர் பகுதியை சேர்ந்த கீதமாலா, வெங்கமேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார், வெங்கமேடு, செங்குந்தர் நகரை சேர்ந்த ஜெயந்தி, வெங்கமேடு, கொங்கு நகரை சேர்ந்த லாவண்யா உள்ளிட்ட 8 நபர்களுக்கு தலா ரூ.1லட்சமும், லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கரூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த முருகேஷ்வரி, எல்.ஜி.பி நகரை சேர்ந்த தர்ஷினி மற்றும் தீபிகா, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த லட்சுமி, சுக்காலியூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ், கோடங்கிப்பட்டியை சேர்ந்த சக்திவேல், தாந்தோணிமலையை சேர்ந்த பானுமதி, கொளந்தானூர் பகுதியை சேர்ந்த பிரபாவதி, பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த ஹேமலதா, கருப்பாயி கோவில் தெரு பகுதியை சேர்ந்த சரவணன், 5 ரோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீநிதி மற்றும் லத்திகா, வ.உ.சி. பகுதியை சேர்ந்த மாரியாயி, அரசு காலனியை சேர்ந்த கிருத்திகா, வெங்கமேடு செங்குந்தர் நகரை சேர்ந்த மோனிஷா உள்ளிட்ட 15 நபர்களுக்கு தலா ரூ.50,000மும் என
இந்த நிகழ்ச்சியின் போது கரூர் கலெக்டர் தங்கவேல், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், துணை மேயர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், வட்டாட்சியர் குமரேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.