Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பரங்குன்றம் விவகாரம் உலக அளவில் முதல்வருக்கு மிகுந்த பாராட்டு, புகழை தந்தது: காசிமுத்து மாணிக்கம் பாராட்டு

சென்னை: சென்னை, சிவானந்தா சாலையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டம் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் நக்கீரன் கோபால், சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிற்றரசு கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் பேசியதாவது:  சங்கிகள் குடும்பம், தீபம் ஏற்றிட தலித் குடியிருப்புக்கு வருவார்களா? மருதமலைக்கு வா, சுவாமிமலைக்கு வா, திருச்செந்தூருக்கு வா என்றால் வரமாட்டார்கள்.

ஏனெனில் அங்கு எல்லாம் மசூதி இல்லை, இஸ்லாமியர்கள் இல்லை, அதனால் அங்கு வர வாய்ப்பு இல்லை. தீபம் ஏற்றுவது என்பது கோயில் மரபு மட்டும் தானே. இதற்காக மனுபோட்ட 10 பேரையே நீதிபதி ஏற்றச்சொல்வது நியாயமா? அந்த பத்து பேரும் ஆர்.எஸ்.எஸ், பாஜககார்கள். மருத்துவமனைக்கு அனுமதி கேட்டால் அனுமதி கொடுத்துவிட்டு, மனுபோட்டவரே நோயாளிகளுக்கு ஆபரேசன் செய்து கொள்ளலாம் என்றதைப் போல், அந்த 10 பேரையே தீபம் ஏற்றிட நீதிபதி உத்தரவு. போதாக்குறைக்கு நானே பார்வையிட வருவேன் என்கிறார்.

நீதிமன்றம் காவிரியை திறந்து விடச் சொன்னபோது, கர்நாடக அரசு திறந்துவிடாது மவுனம் காத்ததே, சி.ஐ.எஸ்.எப் விட்டு நீதிபதி உத்தரவிட்டு தண்ணீர் திறக்கப்பட்டதா? நீதிமன்ற தீர்ப்புப்படி பாஜவினர் பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்று வழிபட்டு வருவார்களா? நில அளவைக்கல்லில் 150 ஆண்டு காலமாக தீபத்தை ஏற்றாமல் இந்த ஆண்டு மட்டும் ஏற்ற வருவது ஏன். குறுக்கு வழியில் மிரட்டிய சாமிநாதன் நீதிபதிக்கு தெரியாது,

144 தடை உத்தரவை போட்டு வந்த பத்துபேரையும் நொந்து போகச் செய்ததுடன், ஓடோடி ஒளிந்து கொண்டனர். அவர்களை காவல்துறை விரட்டியதை மக்கள் கைதட்டி சிரித்து வரவேற்றனர். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதும், காவடி எடுப்பதும் நமது வேலை .எச்.ராஜா காவடி எடுப்பாரா? நாக்கில் வேல் குத்தியிருப்பாரா? புட்டபர்த்தி பாபா சொன்னது போல ராஜ ராஜ சோழனின் மறுபிறவியான கலைஞரின் மகன் அல்லவா முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து- இந்து அல்லாதோர் எனக்கருதாமல் எல்லோரும் என் சகோதர சகோதரிகள் என வாழ்பவர்.

அதனால் தான் 144 தடை உத்தரவு போட்டு அமைதியை ஏற்படுத்தினார். இந்த 144 தடை உத்தரவு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உலகளவில் மிகுந்த பாராட்டையும், மதநல்லிணக்கவாதி என்கிற புகழையும் தந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்கம் மக்கள் நிற்கிறார்கள். அதனால் தான் மீண்டும் சொல்வோம், மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முடிசூடும் நாள் நெருங்குகிறது. இவ்வாறு கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கூறினார்.