சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.98 கோடியே 92 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் மற்றும் புதிய மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.60 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம், தென்காசி மாவட்டம், கடானா கிராமத்தில் அரசு மீன் விதைப் பண்ணை மொத்தம் 98 கோடியே 92 லட்சம் செலவில் 4 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
+
Advertisement


