சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக மொத்தத்தில் 6,41,14,582 கணக்கீட்டு படிவங்கள் அச்சிடப்பட்டது. நேற்று வரை 5,90,13,184 கணக்கீட்டு படிவங்கள், அதாவது 92.04% படிவங்கள் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களில் தேவையான தொடர்புடைய விவரங்களை நிரப்ப வேண்டும். மேலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை சேகரிக்க வீடு தோறும் வருகை தரும்போது வாக்காளர்கள் தங்களது நிரப்பப்பட்ட படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
+
Advertisement


