புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் தணிகைத்தம்பி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை : புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் தணிகைத்தம்பி அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் திரு.இரா. தணிகைத்தம்பி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரிதும் வருந்தினேன். திரு. இரா. தணிகைத்தம்பி அவர்கள் நவசக்தி, தினமலர், ஆனந்த விகடன் உள்ளிட்ட முன்னணி ஏடுகளில் பணியாற்றியவர்.
பெருந்தலைவர் காமராஜர் மீதும் காங்கிரஸ் பேரியக்கத்தின் மீதும் மிகுந்த பற்று கொண்டிருந்த அவர், புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத் தலைவராகவும், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு குழு உறுப்பினராகவும் சிறந்த முறையில் பங்களித்தவர். திரு. இரா. தணிகைத்தம்பி அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,"இவ்வாறு தெரிவித்தார்.


