தமிழக அமைச்சர் முத்துசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை : தமிழக அமைச்சர் முத்துசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். யாருக்கும் எந்த கோபமும் வராத அளவிற்கு நடந்து கொள்வார் நயினார் நாகேந்திரன் என்றும் வெளிநடப்பு செய்யும் போது கூட சிரித்துக் கொண்டே செல்பவர் நயினார் என்றும் முதல்வர் தெரிவித்தார்.