தமிழ்நாட்டுக்கான உரங்களை ஒன்றிய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
டெல்லி : தமிழ்நாட்டுக்கான உரங்களை ஒன்றிய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "காரிப், எதிர்வரும் ராபி பருவத்துக்கு தேவையான உரங்களை உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு 27,823 மெட்ரிக் டன் யூரியாவை உடனடியாக வழங்க வேண்டும்,"இவ்வாறு தெரிவித்தார்.