மயிலாடுதுறையில் ரூ.113.51 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மன்னம்பந்தலில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.48.17 கோடியிலான 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.113.51 கோடி மதிப்பில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.271.24 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 54,461 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.